இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ரு தனிப்பட்ட பாவமோ, கிரகமோ எந்தப் பலனையும் தரமுடியாது. கூட்டு கிரகங்களும், தொடர்புடைய பாவங்களும் சேர்ந்தே பலன்களைத் தீர்மானிக்கின்றன. ஒரு வாகனம் பயணப்படும்போது, அதை இயக்கும் சக்தியாகிய எரிபொருள், வாகனத்தை ஓட்டுபவர், வாகனம் செல்லும் சாலையின் தன்மை எனும் மூன்று காரணிகள் அந்த வாகனத்தின் இயக்கத்தை உறுதிசெய்யும். வாகனத்தில் ஏற்படும் பழுது, வாகன ஓட்டியின் கவனக்குறைவு, சாலையில் ஏற்படும் தடை போன்றவை வாகன இயக்கத்தைத் தடை செய்யும். அதுபோல, ஒரு பாவம் அல்லது கிரகத்தின் இரண்டு, நான்கு மற்றும் பதினோ றாம் பாவங்களே அந்த பாவத்தின் இயக் கத்திற்கு உதவும் "அர்களா' எனப்படும். இயக் கத்தைத் தடுக்கும் மூன்று, பத்து, பன்னி ரண்டாம் பாவங்கள் "விரோத அர்களா', "அர்களா', "விபரீத அர்களா', "விரோத அர்களா' ஆகியவற்றின் சாதக- பாதகத்தைப் பொருத்தே பரிகாரங்களைக் காண முடியுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

Advertisment

""உருத்திரரே! விலங்குகள் தன் இரைக்காகவும், அச்சத்தாலுமே மற்ற உயிர்களிடத்து பகை கொள்கின்றன.

siva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

ஆனால் மேலான அறிவுடைய மனிதனோ சகமனிதரிடம் காரணமின்றி விரோதம் காட்டுகிறான். இதன் காரணத்தைத் தாங்களே விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மங்களநாயகி திருக்கண்டியூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு ஆதிவில்வவனநாதரைப் பணிந்து கேட்டாள்.

திரிமூர்த்தர் உரைத்தது- ""வேடனின் வலையில் சிக்குண்ட பூனை, வலையை அறுத்துத் தன்னைக் காப்பாற்றும் எலியை உண்பதில்லை. ஆனால் மனிதனோ தன்னை ஆதரிப்பவரையே வீழ்த்துகிறான். தனக்கு ஆபத்தும் நோயும் வரும் காலத்தில் எல்லாருடனும் நட்பாயிருக்க விரும்பும் மனிதன், வலிமையாயிருக்கும்போது சகமனிதரைப் பகைத்துக்கொள்கிறான்.

அகங்காரத்தால் வரும் ஆசையே பொறாமை யெனும் பகையை உண்டாக்குகிறது. வாழ் விலும், தாழ்விலும் பிற உயிர்களை விரும்பும் மனிதனே இறையருளைப் பெறுகிறான். மனிதருக்கு முற்பிறவியின் தொடர்பால் மட்டுமே பிறரிடம் நட்பும் பகையும் உண்டாகிறது.''

""சிவோத்தமரே! "லதா விருச்சிகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், சித்திரை இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், கிருத்திகை முதல் பாதத்தில் சுக்கிரனும், மிருகசிரீட நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் குருவும், மிருகசிரீட நான்காம் பாதத்தில் சனியும், பூசம் நான்காம் பாதத்தில் சூரியனும், ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் புதனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருக் கோவிலூர் எனும் திருத்தலத்தில் அருள் புரியும் வீரட்டேஸ்வரரை அன்னை சிவானந்த வல்லி வினவினாள்.

அநந்தர் உரைத்தது- ""ஈஸ்வரியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் ஞானவேலன் எனும் பெயருடன், மதுரையம்பதியில் வாழ்ந்தான். இளம்வயதில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். தர்க்க சாஸ்திரம் கற்று நீதியரச ரானான். துவக்கத்தில் தூய்மையாயிருந்த அவன், காமினி (பெண்ணாசை), காஞ்சனம் (பொன்னாசை), பொய்கீர்த்தி (வீண்புகழ்) எனும் முக்குரும்பினால் நீதி வழுவி னான். நீதியரசின் செங்கோல் வளைந்தது. "அறம் பிழைத் தோர்க்கு அறமே கூற்றாகும்' என்பதால், மனநோயுற்று தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டான். பிரேத ரூபத்தில் பலகாலம் துன்புற்ற பின், தென் புலத்துக் காவலனிடம் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, விலங்குபோல் இழுத்துச் செல்லப்பட்டான். அங்கு அவன் செய்த பாவத்தால் பயனடைந்தோரும் பரிதவிப் பதைக் கண்டான். தர்மராஜனாகிய எமனின் ஆணைக்கிணங்க, ரத்தமும், சீழும், கொடிய பிராணிகளும் சூழ்ந்த வைதரணி நதியில் மூழ்கிய பின், "அக்கினி குண்டம்' எனும் நெருப் பாறு உள்ள நரகத்தில் உலர்ந்துபோனான். மனதால் செய்த பாவத்தின் தண்டனை முடிந்து, மண்ணாகிய உடலால் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடி மண்ணுலகம் புகுந்தான். பாடலூரில் பிறந்து, நேமிநாதன் என்று பெயரிடப்பட்டான். இளம்வயதில் ஏற்பட்ட நோயால் கூன் விழுந்த முதுகைப் பெற்றான். முன்ஜென்மத்தில் நேர்மையை வளைத்ததால், நேர்நடையையிழந்து உடற்கூனலால் அவதியுறுகிறான். தர்மராஜாவாகிய எமன், தான் செய்த தவறுக்கு மனம்வருந்தி, தன் அதிகார தண்டத்தைத் திரும்பப் பெற்ற "தண்டீஸ்வரம்' எனும் திருத்தலத்தில் இறைப் பணியாற்றினால் சுகம் பெறுவான்.''

(வளரும்)

செல்: 63819 58636

____________

நாடி ரகசியம்

1. மக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் குருவும், ரோகிணி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும் உள்ள அமைப்பைப் பெற்ற ஜாதகர், தலைவனாகி புகழின் உச்சியை அடைவார்.

2. மக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்க, ஜாதகர் பொருளாதாரத்தில் அதிக ஏற்றத்தாழ்வுகளைக் காண்பார்.

Advertisment

3. மக நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும் சனியும் சேர்ந்திருந்து, அவர்களுக்கு செவ்வாயின் பார்வையும் ஏற்பட்டால், ஜாதகரின் ஆயுள் பாலாரிஷ்டத்தால் குறையும்.

கேள்வி: ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவத்தை விளக்க முடியுமா? ஜோதிடத்தை எளிதாகக் கற்க உதவும் நூல் எது?

பதில்: எந்தக் கலையையும் குருமூலம் கற்பதே நல்லது. குரு தொட்டுக்காட்டாத வித்தை துலங்காது. "காட்ட குருவில்லாமல் கண்டறிதல் ஆகாதே'. யோகம், ஞானம், ஜோதிடம் போன்ற எல்லாவற்றுக்கும் அடிப்படை, ஆதாரத் தத்துவங்களாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களையும் அறிவதேயாகும். பஞ்சபூதத் தத்துவத்தில் துவங்கி, ஐந்து அவஸ்தை வரையுள்ள பேதத்தின் அடிப்படையில் உருவானதே ஜோதிடம். தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பொருத்திப் பார்க்கும்போது மட்டுமே பாவம் மற்றும் கிரகங்களின் இயல்பும், இயக்கமும், ராசிகளின் கட்டுமானமும் விளங்கும். இலையின் வடிவமைப்பை அறியாதவர், பச்சிலை வைத்தியராக முடியாது. யோக, ஞான நூல்களிலும் சில ஜோதிட சூட்சுமங்கள் விளக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு- ஆதிசங்கரரின் "ஆத்ம போதம்' எனும் ஞானநூல் "பஞீகரணம்' என்ற பஞ்சபூத பகுப்பாய்வை விளக்குகிறது. ராசி, பாவ, கிரகத் தொடர்புகளை ஆராயப் பயன்படும் முறையே "பஞீகரணம்'. ஒரு ஜாதகத்தின் தொண்ணூற்றாறு தத்துவ பேதங்களையும் "கந்தர்வ நாடி' விளக்குகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">